செய்திகள்

தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை... சனம் ஷெட்டி ஆவேசம்!

DIN

நடிகை சனம் ஷெட்டி சினிமாவில் நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை சனம் ஷெட்டி அம்புலி, கதம் கதம் உள்ளிட்ட படங்களிலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர். பிக்பாஸில் போட்டியாளராக ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

தற்போது, விளம்பர மாடலாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்.

இந்த நிலையில், சனம் ஷெட்டி கல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்க சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக, அனுமதி பெற சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார்.

சனம் ஷெட்டி.

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த சனம், ”கேரள சினிமாத்துறையில் பெண்களுக்கு பாலியல் சீண்டல் இருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை கூறியுள்ளது. இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி. தமிழ் திரைத்துறையிலும் இது நடக்கிறது. எனக்கும் நடத்திருக்கிறது. வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களை, ’செருப்பால் அடிப்பேன் நாயே’ என திட்டியிருக்கிறேன்.

பாலியல் ரீதியாக அணுகுபவர்களிடம் விலகியே இருங்கள். உங்கள் திறமைக்குக் கிடைக்காத எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். தமிழ் சினிமாவில் எல்லாரும் அப்படியான ஆள்கள் இல்லையென்றாலும் இங்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆண்கள் நமக்காக போராடுவார்கள் என்றில்லாமல் நம் உரிமைக்காக நாம் போராட்டித்தான் ஆக வேண்டும்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறக்கும்... நியதி பட்னானி!

வெள்ளை மாளிகையில் புதிய கட்டுப்பாடுகள்: முக்கிய பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மறுவெளியீட்டுக்குத் தயாராகும் தேவர் மகன்!

ரஷிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சரிவு!

உஷ்... ஹினா கான்!

SCROLL FOR NEXT