மிஸ் யூ 2ஆவது பாடல் போஸ்டர்.  
செய்திகள்

மிஸ் யூ: சந்தோஷ் நாராயணின் குரலில் புதிய பாடல்!

நடிகர் சித்தார்த் நடிக்கும் மிஸ் யூ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களைப் பெற்றன.

சித்தா படத்துக்குப் பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்தெடுத்து வருகிறார் நடிகர் சித்தார்த்.

தற்போது காதல் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கு மிஸ் யூ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்‌ஷன்ஸ் தயாரிக்க இயக்குநர் ராஜசேகரன் இயக்குகிறார்.

ஏற்கனவே முதல் பாடல் வெளியாகிய நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

ஜிப்ரான் இசையமைப்பில் ரோகேஷ் வரிகளில் உருவான இப்பாடலை சந்தோஷ் நாராயணன் சித்தார்த் பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT