சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் 'கொட்டுக்காளி'.
நடிகர் சூரி நாயகனாக நடித்த இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.
பெர்லின் உள்ளிட்ட சில சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரையரங்க வெளியீடாக இப்படம் இன்று (ஆக. 23) வெளியானது. இது குறித்து நடிகை அன்னா பென் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது:
இன்றுமுதல் கொட்டுக்காளி உங்களுடையது. இந்தச் சிறப்பான படம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.
2 மணி நேரத்தில் நீங்கள் திரையில் பார்க்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்ந்திருப்பார்கள். இந்தப் படத்தின் மூலம் நாங்கள் உங்களை எங்களுடன் கலையின் மூலம் தொடர்புப்படுத்துவோமென நம்புகிறோம். இந்தப் படத்தின் உண்மை உங்களது இதயத்தை சென்றடையும் என்றும் நம்புகிறேன்.
இந்தப் படத்தில் என்னை நடிக்கவைத்த கடவுளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என்னுள் மீனா கதாபாத்திரத்தினை இருக்குமென நம்பி வாய்ப்பு தந்தமைக்கு இயக்குநர் பி.எஸ்வினோத் ராஜுக்கு மிகுந்த அன்பும் நன்றியும். உங்களுடன் வேலை செய்தது ஒரு கனவு போலிருக்கிறது. நான் மீனா கதாபாத்திரத்தை புரிந்துகொள்வதற்கும் என்னை நானே வெளிப்படுத்த நீங்கள் கொடுத்த இடமும் என்னுடன் பொறுமையாக பயணித்தமைக்கும் நன்றி.
தற்போது இருக்கும் கொட்டுக்காளி மலர நீங்கள் கொடுத்த பாதுகாப்பான சூழ்நிலையே காரணம். இயற்கையே நமக்கு உதவியதாகவும் நம்புகிறேன்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இல்லாவிட்டால் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியாது. எல்லைகளை தாண்டி செல்ல மிகப்பெரிய தூணாக இருந்தீர்கள் சிவகார்த்திகேயன் சார்.
டியர் சூரி, நீங்கள் ஒரு புதிய கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளீர்கள். உங்களது சினிமா வாழ்க்கையில் இதுவொரு சிறப்பு மகுடமாக இருக்கும். இதைக்காணும் முதல் நபராக நான் இருக்கிறேன். மீனா காதாபாத்திரம் பாண்டியிடமிருந்து ஆற்றல்களை பெற்றுகொண்டாள்.
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த துணை நடிகராக நீங்கள் இருக்கிறீர்கள். இந்தப் படத்தில் என்னுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மற்றவர்கள், பெரிய நோக்கத்துக்காக நடித்துள்ளார்கள். உங்களுடன் நேரம் செலவிட்டது எப்போதும் நினைத்து பெருமை கொள்ளும் ஒன்று. ஒளிப்பதிவாளரின் கடின உழைப்பு என்னை வியக்க வைத்தது.
எனது குடும்பத்தைத் தாண்டி வெளியே இருக்கும் குடும்பமாகவே இந்தப் படக்குழுவினரைப் பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.