சினிமா வாழ்க்கை முழுமை பெற்றது: அனஸ்வரா
ரஜினி குறித்து அனஸ்வரா ராஜன்....
நடிகை அனஸ்வரா ராஜன் நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்ததை நெகிழ்ச்சியாக பதிவிடுள்ளார்.
நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவான வித் லவ் திரைப்படம் நாளை (பிப். 6) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், படம் அருமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நிகழ்வில் தன் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகை அனஸ்வரா ராஜன் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து,”சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு... என் அப்பாவின் விருப்பமான நடிகரை நேரில் சந்தித்ததை எப்போதும் மறக்க முடியாது.
அவரைப் பார்த்தபோது என் அப்பா தலைவரைக் காணும் குழந்தையாக மாறிவிட்டார். வித் லவ் சிறப்பு காட்சி என் சினிமா முழுமை பெற்றது போல இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.