முகப்பு

அற்புதமான நடிகை... மகாராஜா திரைப்படத்தைப் பாராட்டிய டாம் ஹேங்ஸ்!

நடிகர் டாம் ஹேங்ஸ் மகாராஜா திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்...

அற்புதமான நடிகை... மகாராஜா திரைப்படத்தைப் பாராட்டிய டாம் ஹேங்ஸ்!
டாம் ஹேங்ஸ், சஞ்சனா நமிதாஸ்
பகிர்:

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ் நடிகை சஞ்சனாவைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு குப்பைத்தொட்டியையும் அதன் பின் இருக்கும் எமோஷனலாக கதையையும் மையமாக வைத்து படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது.

பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த இப்படம், ஓடிடியிலும் வெளியாகி பெரும்பாலோனோரின் விருப்பத் திரைப்படமாக அமைந்திருந்தது. மேலும் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மகாராஜா திரைப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

இப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ் மகாராஜா திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதில் நடித்த சஞ்சனாவை அதிகம் பாராட்டியுள்ளார்.

முக்கியமாக கிளைமேக்ஸ் காட்சியைக் குறிப்பிட்டு, “என்னால் இன்னும் அப்பெண்ணிடமிருந்து வெளியேற முடியவில்லை. என்ன ஒரு அசாதாரணமான நடிகை? என்னால் இப்படி நடிக்க முடியாது. நானாக இருந்திருந்தால் அவனைக் கொன்றிருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

டாம் ஹேங்ஸ் கேஸ்ட் அவே (cast away), ஃபாரஸ்ட் கம்ப் (forest gump) உள்ளிட்ட மிகச்சிறந்த திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Famous Hollywood actor Tom Hanks has praised actress Sanjana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.