தி பேட்மேன் 2 படத்தினால் இருத்தலியல் பதற்றத்தில் சிக்கிய ஸ்கார்லெட் ஜோஹான்சன்!
ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் அளித்த பேட்டி குறித்து...
பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் அளித்த பேட்டியில் தி பேட்மேன் படத்தினால் தனக்கு இருத்தலியல் பதற்றம் (existential angst) ஏற்பட்டது எனக் கூறியுள்ளார்.
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் நடித்த நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் தற்போது டிசி சினிமாட்டிக் யுனிவர்ஸில் பேட்மேன் திரைப்படத்தில் நடிக்கவிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது.
கிறிஸ்டோஃபர் நோலனின் டார்க் நைட் திரைப்படம் பேட்மேன் படங்களின் வரிசையில் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து கடைசியாக 2022ல் தி பேட்மேன் என்ற படம் வெளியானது.
Advertisement
Advertisement
மாட் ரீவிஸ் இயக்கத்தில் ராபர்ட் பேட்டின்சன் ப்ரூஸ் வேன் கதாபாத்திரத்தில் தி பேட்மேன் படத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் நடிக்கவிருக்கிறார். அவர் மார்வெல் யுனிவர்ஸில் பிளாக் வுடோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது புதிய படமான பேப்பர் டைகர் படத்துக்கான புரமோஷனில் பேட்மேன் 2 குறித்து கூறியிருப்பதாவது:
இதில் நடிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்தினைப் புரிந்து கொள்வதிலும் கடினமாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை. அந்த கதாபாத்திரமா அல்லது வாழ்க்கையில் நான் எங்கு இருக்கிறேன் என்பதா எனத் தெரியவில்லை. ஆனால், அதில் நடிக்க கடினமாக இருந்தது.
இந்தப் படத்தில் நடிப்பதால் எனக்கு இருத்தலியல் பதற்றம் ஏற்பட்டது. இப்போதைக்கு இது மட்டுமே என்னால் கூற முடியும் என்றார்.
41 வயதாகும் ஸ்கார்லெட் ஜோஹான்சன் முன்னதாக பிளேக் விடோ படத்தில் நடாஷா ரோமானோஃப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது டிசி சினிமாட்டிக் உலகில் நடித்துள்ளார்.