FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் கிளேஃபேஸ்

இயக்குநர் ஜேம்ஸ் வாட்கின்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிளேஃபேஸ் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

28 வினாடிகள் முன்பு
பகிர்:

மைக் ஃபிளானகன் மற்றும் ஹொசைன் அமினி ஆகியோரின் திரைக்கதையிலிருந்து ஜேம்ஸ் வாட்கின்ஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நவோமி ஆக்கி, டேவிட் டென்சிக், மேக்ஸ் மிங்கெல்லா மற்றும் எட்டி மார்சன் ஆகியோருடன் நான்சி கரோல் மற்றும் ஜோஷுவா ஜேம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோதம் நகரத்தில் வளர்ந்த சிறுவனான மேட் ஹேகன் பின்னாளில் ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக உயர்கிறார். ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நடிகராக உள்ள கதாநாயகனின் முகம் ஒரு சம்பவத்தில்

சிதைந்துவிட அதை சரி செய்யும் அவரது போராட்டமே கிளேஃபேஸ் திரைப்படத்தின் கதை.

Advertisement

Advertisement

இப்படத்தை மேட் ரீவ்ஸ், லின் ஹாரிஸ், ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சஃப்ரன் ஆகியோர் தயாரித்துள்ளனர், இவர்களுடன் மைக்கேல் இ. உஸ்லானும் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராப் ஹார்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ஜேம்ஸ் பிரைஸ், படத்தொகுப்பாளர் ஜான் ஹாரிஸ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் கீத் மேடன் ஆகியோர் இப்படக்குழுவில் பணியாற்றியுள்ளனர். வோல்கர் பெர்டெல்மேன் இசையமைத்துள்ளார்.

டிசி ஸ்டுடியோஸ் வழங்கும், 6த் & இடாஹோ தயாரிப்பான இத்திரைப்படம் அக்டோபர் 23 வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments