FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாரமவுண்ட் + வார்னர் பிரதர்ஸ் = ஸ்கைடான்ஸ்..! ஹாலிவுட்டின் ராட்சத தயாரிப்பு நிறுவனம்!

ஹாலிவுட்டின் ராட்சத தயாரிப்பு நிறுவனமாக ஸ்கைடான்ஸ் உதயமாகி இருப்பது குறித்து...

ஸ்கைடான்ஸ் நிறுவனத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / ஸ்கைடான்ஸ்
பகிர்:

ஹாலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி ஆகியவற்றை பாரமவுண்ட்டின் தாய் நிறுவனமான ஸ்கைடான்ஸ் கார்பரேஷன் வாங்கியுள்ளது.

இனிமேல் பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் ’ஸ்கைடேன்ஸ்’ என்ற ஒற்றை பெயரின் கீழ் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி தயாரிப்பு நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. பல நூறு திரைப்படங்களும் எச்பிஓ மற்றும் டிஸ்கவரி சேனலும் கிடைக்கும் என்பதால் ஓடிடியில் பெரிய வருவாயை ஈட்டலாம் என நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமெரிக்க டாலர் 81 பில்லியனுக்கு ஸ்கைடேன்ஸ் நிறுவனம் இதனை வாங்கியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8,100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கைடேன்ஸ் நிறுவத்தின் சிஇஒ-ஆக கோட்டீஸ்வரர் டேவிட் எல்லிசன் இருக்கிறார். இனிமேல் எச்பிஓ, சிஎன்என் என அனைத்துமே இந்த ஸ்கைடேன்ஸ் கீழ் வருமென்பது கவனிக்கத்தக்கது.

கடந்தாண்டு டேவிட் எல்லிசன் பாரமவுண்ட் நிறுவனத்தை 8 பில்லியன் அமெரிக்க டாலருக்க வாங்கினார். தற்போது அதை விடவும் பெரிய நிறுவனமான வார்னர் பிரதர்ஸை வாங்கி அசத்தியுள்ளார்.

summary

Paramount and Warner Bros are now one Hollywood giant: Skydance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments