முகப்பு

2018 சர்ச்சை: வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து வார்னர், கவாஜா தற்காலிக நீக்கம்!

ஆஸ்திரேலிய ஊடகத்தின் வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள வார்னர், கவாஜா குறித்து...

2018 சர்ச்சை: வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து வார்னர், கவாஜா தற்காலிக நீக்கம்!
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
பகிர்:

ஆஸ்திரேலிய ஊடகத்தின் வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் வீரர்கள் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2018 டெஸ்ட் தொடரில் பந்தைச் சேதப்படுத்தியது அணியில் இருந்த அனைவருக்கும் தெரியும் என உஸ்மான் கவாஜா தனது வாழ்க்கை வரலாற்று நூலில் தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த மோசடியில் சிக்கிய பந்துவீச்சாளர் பென்கிராஃப்ட், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னருக்குக் கடுமையான தண்டனை கிடைத்தது.

Advertisement

Advertisement

உஸ்மான் கவாஜைவத் தொடர்ந்து கேமரூன் பென்கிராஃப்டும் பாட் கம்மின்ஸுக்கு எதிராக பேட்டியளித்தார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஃபோக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் கோட் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

சமீபத்திய நிகழ்வுகளால், எங்கள் வர்ணனையாளர் குழுவில் இருக்கும் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா இருவருக்கும் சில வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளன.

எங்கள் வர்ணனையாளர் குழுவில் அனைவரையும் நாங்கள் ஆதரிக்கிறோம். பல்வேறு பார்வைகளைக் கொண்டவர்கள் இந்த கோடைக்கால கிரிக்கெட்டும் அவசியம் என்பதையும் வரவேற்கிறோம். அதேசமயம் புதிய புதிய கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற அழுத்தமும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

இந்தக் காரணத்தினால் முழுமையாக ஆட்டத்தில் கவனம் செலுத்துவதில் பிரச்னை ஏற்படுகின்றது. இந்தச் சூழ்நிலையில் அவர்களைத் தள்ளுவது நியாயமானதாக இருக்காது.

எங்களது பார்வையாளர்களுக்கு சிறந்த கிரிக்கெட் அனுபவத்தை அளிப்பதே முதன்மையாக நோக்கமாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து அவதானிப்போம். வார்னர், கவாஜாவின் திரும்ப வரும் தேதி குறித்து இப்போதைக்கு முடிவாகவில்லை எனக் கூறினார்.

summary

2018 cheating scandal: Warner and Khawaja temporarily removed from commentary roles!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.