கவாஜா கூறியது 100% உண்மை... சர்ச்சையின் தீவிரத்தை அதிகரித்த டேவிட் வார்னர்!
உஸ்மான் கவாஜாவின் சர்ச்சையான கருத்துகளை முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் ஆதரித்து பேசியிருப்பது குறித்து...
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜாவின் சர்ச்சையான கருத்துகளை முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆதரித்து பேசியிருப்பது பிரச்னையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா 2018ல் தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட்டில் விளையாடியது. அதில் 1-3 என தோல்வி அடைந்தது. இதில் மணல்காகிதத்தைப் (sandpaper) பயன்படுத்தி பந்தைச் சேதப்படுத்தியதால் பென் கிராஃப்ட் , கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னருக்கு அபாரதத்துடன் தண்டனை விதிக்கப்பட்டது.
மீபத்தில் டெஸ்ட்டில் ஓய்வுபெற்ற உஸ்மான் கவாஜா இந்த சம்பவம் குறித்து தனது வாழ்க்கை வரலாற்று நூலில், “நாங்கள் அந்த ஒரு போட்டியில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் ஏமாற்றி இருக்கிறோம். இது அனைத்து வீரர்களுக்கும் தெரியும்” எனக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
இதனால் கேப்டன் பொறுப்புக்கு டேவிட் வார்னர் வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டதும் பின்னர் அது சில ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உஸ்மான் கவாஜாவின் குற்றச்சாட்டுகள் குறித்து வார்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
உஸ்மான் கவாஜா கூறியது 100 சதவிகிதம் உண்மை. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரச்னை குறித்து மீண்டும் பேசுகிறேன். உஸ்மான் கவாஜா உங்களுக்கு நான் எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன். நீங்கள் செய்ததுக்கு நான் நன்றியும் கூறுகிறேன்.
இப்போது அனைவருக்கும் உண்மை தெரிந்திருக்கும். மக்களுக்கும் தெரிய வேண்டும். நீங்கள் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது. எனது குடும்பத்துக்கு, ஸ்டீவ் ஸ்மித், பென் கேமரூன் குடும்பத்துக்கும் கடினமான நேரம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதுதான் தேவையானது. என் முழுமையான ஆதரவு உங்களுக்கு இருக்கிறது.
கிரிக்கெட்டை விட சில விஷயங்கள் பெரிதானது. இது பழைய வடுக்களை மீண்டும் திறப்பது அல்ல; இது சரியாக ஆறாத பழைய வடுக்கள் மீதான விசாரிப்பு குறித்தது. உண்மையைப் பேசுவதற்கு தைரியம் வேண்டும். பாராட்டுகள் உஸ்மான் கவாஜா.
யார் பொறுப்பு என்பதில் கேள்விகேட்கப்பட்டது. முறையான விசாரணை நடைபெற்றதா என்பதையும் கேள்வி எழுப்ப வேண்டும். கிரிக்கெட் ஆஸ்திரேலிய இந்த விவகாரத்தில் அவசர கதியில், குளறுபடியாக முடிவெடித்தது என்றார்.