FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடர் நிறைவு!

பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...

59 வினாடிகள் முன்பு
பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடர் நிறைவு! - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ இணையத் தொடர் நேற்று (நவ. 11) நிறைவடைந்தது.

இந்தத் தொடரில் போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, நிகிலா சங்கர், லுதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், சித்தார்த் பாபு, பிரமோதினி, நம்ரிதா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தனர்.

Advertisement

Advertisement

போலீஸ் போலீஸ் மற்றும் வேர மாரி லவ் ஸ்டோரி இணையத் தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இந்தத் தொடரை இயக்கி வந்தார்.

வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் 4 சகோதர, சகோதரிகளின் வாழ்க்கை முறை மற்றும் குடும்பத்தில் நிகழும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி, நகைச்சுவை கலந்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடர், பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது.

அடுத்த வாரம் நவ. 18 முதல் (புதன்கிழமை தோறும்) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் புதிய தொடரான மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ் இணையத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

summary

The web series 'Brothers and Sisters', which gained popularity among fans, has come to an end.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.