FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிக் பாஸ் பிரபலங்கள், மகிழ் திருமேனி நடிக்கும் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்’ இணையத் தொடர்!

‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்’ ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவ. 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

’மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்’ இணயத் தொடர் போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

புதிய அலுவலக நகைச்சுவை இணையத் தொடர் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்’ ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவ. 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த இணைய தொடரில் நடிகர்கள் பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கார்ப்பரேட் அலுவலகப் பின்னணியில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்’ தொடர், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கப் போராடும் இளம் தம்பதியான அறிவு மற்றும் ஐஸ்வர்யாவைச் சுற்றி நகர்கிறது. இருவருக்கும் ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது.

Advertisement

Advertisement

ஆனால், அந்த நிறுவனத்தின் கடுமையான விதிமுறையின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகப் பணிபுரியக் கூடாது. இதனால் தங்களது வேலையையும் பொருளாதார நிலையையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், தங்களது திருமண உறவை மறைத்து, அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் போல நடந்துகொள்ள இருவரும் முடிவு செய்கின்றனர்.

இதற்குப் பிறகு ஆபிஸ் மீட்டிங்ஸ், காபி பிரேக்ஸ், சக ஊழியர்களுடனான உரையாடல்கள் என ஒவ்வொரு தருணத்திலும் அவர்களது ரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பதற்றம் உருவாகிறது. கண்டிப்பான மேலாளரைச் சமாளிப்பது முதல் ஆர்வத்துடன் கேள்வி கேட்கும் சக ஊழியர்களை எதிர்கொள்வது வரை, தங்களது திருமண வாழ்க்கையை மறைப்பதற்காகத் தொடர்ந்து புதுப்புது பொய்களைக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

நகைச்சுவைக்கு மத்தியில், இன்றைய சூழலில் பணிபுரியும் இளம் தம்பதிகளின் வாழ்க்கைப் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் கார்ப்பரேட் வாழ்க்கையின் அன்றாட யதார்த்தங்களையும் இந்தத் தொடர் பேசுகிறது.

இந்தத் தொடரில் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி மற்றும் ஸ்மேஹா மணிமேகலை ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களான அறிவு மற்றும் ஐஸ்வர்யாவாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் திரைப்படங்களில் நடித்ததன் மூலமும், பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமான சனம் ஷெட்டி மற்றும் ‘தடம்’, ‘கலகத் தலைவன்’, ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அப்துல் கபீஸ் இயக்கத்தில், ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ் இணையத் தொடர், ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு எபிசோடுகளுடன் நவ. 18 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது.

summary

The new office-themed comedy web series ‘Mr. & Mrs. Office’ is set to stream on the JioHotstar OTT platform starting November 18.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.