FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிக் பாஸ் 10: இந்த வாரம் இருவர் வெளியேற்றம்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் குறித்து...

பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 9 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 63-வது நாளை எட்டியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி, தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்காகவும் சிலர் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, 9வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு அஷ்மிதா, அவினாஷ், அக்‌ஷிதா, ஜேசன், வினோத் பாபு, முனியம்மாள், முத்தழகி, பிருத்வி ஆகிய 8 பேர் தேர்வாகி இருந்தனர்.

இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற அஷ்மிதா, அக்‌ஷிதா ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் போட்டியாளர் ஜேசன், அவரிடம் இருந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்தி அவினாஷை காப்பாற்றியுள்ளார்.

summary

Reports indicate that two contestants have been eliminated from Bigg Boss Season 10 this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.