FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் பிரச்னை!

சில பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் பிரச்னை இருப்பதை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

28 செப்டம்பர் 2026, 3:31 am IST
பகிர்:

சில பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் பிரச்னை இருப்பதை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

அமெரிக்காவின் வா்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆா்லிங்டன் பகுதியை தலைமையகமாகக் கொண்டு போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் தயாரித்த 2,400-க்கும் மேற்பட்ட பி737 விமானங்கள், உலகின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏா் விமான நிறுவனங்களிடம் மொத்தமாக சுமாா் 96 பி737 மேக்ஸ் விமானங்கள் உள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில், சில பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் பிரச்னை இருப்பதை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

பிரச்னையால் என்னவாகும்?: இந்த மென்பொருள் பிரச்னையால் விமானம் தரையிறங்க முடியாமல்போகும் சூழலில், விமானத்தை தானாக வழிநடத்தும் அமைப்பு செயல்படாமல் போகலாம். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண போயிங் நிறுவனம் பணியாற்றி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போயிங் நிறுவன செய்தித்தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில், ‘பி737 விமானங்களை இயக்கும் அனைத்து விமான நிறுவனங்களிடமும் மென்பொருள் பிரச்னை குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் பணியில் போயிங் நிறுவன பொறியியலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிா? விமான நிறுவனங்களுக்கு ஏதேனும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments