FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சௌதி அரேபியாவுக்கான சர்வதேச விமானங்கள் தொடர்ந்து ரத்து! ஆகாசா ஏர் நிறுவனம் அறிவிப்பு

சௌதி அரேபியாவுக்கான சர்வதேச விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதாக ஆகாசா ஏர் நிறுவனம் அறிவிவித்திருப்பது பற்றி...

16 வினாடிகள் முன்பு
ஆகாசா ஏர் நிறுவனம்
பகிர்:

வளைகுடா நாட்டில் நிலவும் பாதுகாப்புச் சூழல் காரணமாக, ஜெட்டாவுக்கான விமான சேவைகள் ரத்தை நவம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஆகாசா ஏர் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ரியாத்துக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் நவம்பர் 30 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அந்த விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள், ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மாமுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் தங்களது விமானங்கள் நவம்பர் 14 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

Advertisement

Advertisement

யேமனில், ஹூதி கிளர்ச்சிப் படைக்கும் சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப் படைக்கும் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களாக நீடித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சௌதி அரேபியாவின் எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களைக் குறிவைத்து ஹூதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விமான நிறுவனங்கள் சௌதி அரேபியாவுக்கான தங்களது விமான சேவைகளைத் தொடர்ந்து ரத்து செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Flight disruptions between India and Saudi Arabia continue, with Akasa Air on Sunday extending the suspension of its services to Jeddah until November 18 amid the prevailing security situation in the Gulf kingdom. The airline said flights to and from Riyadh would remain suspended until November 30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments