இயக்குநர் மாரி செல்வராஜ். 
செய்திகள்

கண்ணீரையும் கதறலையும் திரைக்கதையாக்கியுள்ளேன்: மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை திரைப்படம் ரிலீஸ் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

DIN

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்தப் படம் இன்று (ஆக.23) திரையரங்குகளில் வெளியாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வாழை படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் பாலா, நடிகர் சூரியும் கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழை ரிலீஸ் குறித்து கூறியதாவது:

அனைவருக்கும் அன்பின் வணக்கம், இன்று என் நான்காவது திரைப்படமான ‘வாழை' வெளியாகிறது. வாழையில், என் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன்.

இனி உங்கள் முத்தத்திலும், அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்.

பிரியங்களுடன் மாரி செல்வராஜ் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT