செய்திகள்

2கே லவ் ஸ்டோரி: 38 நாள்களில் படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன்!

DIN

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படமாக காதல் பின்னணியில், ’2கே லவ் ஸ்டோரி' உருவாகி வருகிறது.

புதுமுக நாயகனாக ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

2கே லவ் ஸ்டோரி

சமீபத்தில் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலகட்டத்திற்கு முன்பாகவே 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார் சுசீந்திரன்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் டி. இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம் காரில் மோதி விபத்து! | Florida

மத்திய புலனாய்வுத் துறையில் எம்டிஎஸ் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராகுலின் கேள்விக்கு பாஜகவும் மோடியும் இன்னும் பதில் அளிக்கவில்லை! - காங்கிரஸ் எம்.பி.

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் அறிவிப்பு விடியோ!

மத்திய தோல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT