நடிகை ரச்சிதா மகாலட்சுமி.  படங்கள்: இன்ஸ்டா / ரச்சிதா மகாலட்சுமி.
செய்திகள்

நான் உயிரோடு இருக்க காரணமே இதுதான்...! காமிராவை வணங்கிய ரச்சிதா மகாலட்சுமி!

சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி காமிராவை வணங்கும் விடியோவை பகிர்ந்துள்ளார்.

DIN

பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. கன்னடத்தில் சீரியல் நடிகையாக ஆரம்பித்தவர் தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடையே ரச்சிதா மகாலட்சுமிக்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது.

ரச்சிதா மகாலட்சுமி

பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

தமிழில் பிக்பாஸ் சீசன் 6இல் பங்கேற்று 91ஆவது நாளில் வெளியேறினார். இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் கூடுதல் புகழ்பெற்றார்.

சினிமாக்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் இந்தாண்டு வெளியான ரங்கநாயக படத்தில் நாயகியாக அறிமுகமானார். லவ் யூ அபி என்ற இணையத்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா.

தற்போது தமிழில் சில படங்களிலும் தெலுங்கில் தள்ளி மனசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் காமிராவை வணங்கும் விடியோவை வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் ரச்சிதா கூறியதாவது:

என்னை உயிருடன் வைப்பதே எனது தொழில்தான். உண்மையாகவே ஆமாம், நான் எனது வேலையை மட்டுமே மிகவும் நேசிக்கிறேன்.

எனது வேட்கை மிகுந்த சினிமாவை நோக்கி பணியாற்றுவதில் வரும் மன நிறைவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்தப் பிரபஞ்சத்துக்கு நன்றி. எப்போதும் வேலை செய்யவே விரும்புகிறேன்.

தள்ளிமனசு படப்பிடிப்பில் இருந்து இன்னும் பல அப்டேட்டுகள் வரும் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT