வாழை பட போஸ்டர், சிவகார்த்திகேயன்.  
செய்திகள்

பல விருதுகள் பெற தகுதியானது வாழை: சிவகார்த்திகேயன் புகழாரம்!

நடிகர் சிவகார்த்திகேயன் வாழை திரைப்படம் குறித்து பாராட்டி பேசியுள்ளார்.

DIN

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்தப் படம் இன்று (ஆக.23) திரையரங்குகளில் வெளியாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வாழை படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் பாலா, நடிகர் சூரியும் கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் வாழை படத்தினை புகழ்ந்து பேசியுள்ளார். அதில், “மிக நெருக்கமான ஒருவரின் கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மீண்டும் மாரி செல்வராஜ் தான் ஒரு வலுவான இயக்குநர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.

வாழை எனக்கு மிகவும் பிடித்த படமாக மாறியிருக்கிறது. பல விருதுகளை வெல்ல தகுதியுள்ள படம் இந்த வாழை” எனப் பாரட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன் வாழ்த்துக்கு மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள் …

கர்ணன் மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன். நன்றி சகோ” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT