கூலி அதிகாரப்பூர்வ அப்டேட்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் நாளை (ஆக. 28) மாலை 6 மணியிலிருந்து துவங்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.