பிரீத்தி முகுந்தன் / அமலா சாஜி / ஷாலின் சோயா / டிடிஎஃப் வாசன் கோப்புப் படங்கள்
செய்திகள்

பிக்பாஸ் - 8 நிகழ்ச்சி போட்டியாளர்கள்?

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி போட்டியாளர்கள் குறித்த பட்டியல் இணையத்தில் வைரல்.

DIN

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி போட்டியாளர்கள் குறித்த பட்டியல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த ஆண்டு 8வது சீசனாக ஒளிபரப்பாகவுள்ளது. தற்போது ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி முடிந்ததும் பிக்பாஸ் - 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த ஏழு சீசன்களாக அவர் தொகுத்துவந்த நிலையில், இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இதனால் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஆவலாக எழுந்துள்ளது. சரத்குமார், சிலம்பரசன், சூர்யா, விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும். அதற்கு முன்னதாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் குறித்த தகவல்கள் வெளியிடப்படும். அந்தவகையில் இம்முறை பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியில் பங்கேற்போர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக சமூக வலைதளத்தில் அதிகம் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நபர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறுவதுண்டு. அந்தவகையில், இம்முறை கவுண்டம்பாளையம் நாயகன் ரஞ்சித், யூடியூபர் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரின் காதலியும் குக் வித் கோமாளி போட்டியாளருமான ஷாலின் சோயா, நடிகர் ரியாஸ் கான், இன்ஸ்டா பிரபலமான அமலா ஷாஜி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதேபோன்று ஸ்டார் பட நடிகை ப்ரீத்தி முகுந்தன், நடிகை பூணம் பாஜ்வா, பாய்ஸ் மணிகண்டன், நடிகர் அருண் பிரசாத் ஆகியோரும் பங்கேற்பதாகத் தெரிகிறது.

தொகுப்பாளரும் நடிகருமான மாகாபா, ஜெகன், குரேஷி, தி புக் ஷோ தொகுப்பாளர் ஆர்.ஜே. ஆனந்தி, நடிகை பிரகிடா சாகா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் தொகுக்கப்பட்ட புகைப்படமும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. எனினும், பிக் பாஸ் முன்னோட்ட விடியோ வெளியாகும் வரை எதையும் உறுதியாகக் குறிப்பிட இயலாது.

பிக்பாஸ் போட்டியாளர்கள்: வைரலாகும் பட்டியல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT