நடிகர் தனுஷ், யாத்ரா.  
செய்திகள்

பாடலாசிரியரான தனுஷ் மகன்!

DIN

நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா பாடலாசிரியராக அறிமுகமாகிறாராம்.

நடிப்பு, தயாரிப்பு, இயக்குநர் பல துறையிலும் அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். அவர் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றிப்படமாகியுள்ளது.

அடுத்ததாக, நடிகர் தனுஷ் இயக்கும் 3வது படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் எனப் பெயர் வைத்துள்ளனர்.

இதில், தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளம் தலைமுறையின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது.

இதன் முதல் பாடலான, கோல்டன் ஸ்பேரோ பாடல் ஆக. 30 ஆம் தேதி வெளியாகிறது. இப்பாடலை அறிவு எழுத,சுப்புலட்சுமி, ஜி.வி. பிரகாஷ், தனுஷ், அறிவு உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

மகனுடன் தனுஷ்.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன் மகனை தனுஷ் நடிகராக அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தகவல் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் வெடிப்பு வழக்கு: ஜம்மு - காஷ்மீரை சோ்ந்தவரை கைது செய்த என்.ஐ.ஏ

எஸ்ஐஆரால் ஒரு கோடி போ் வாக்குரிமையை இழக்க வாய்ப்பு: சீமான்

அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் ‘சிறப்பு திருத்தம்’: தோ்தல் ஆணையம் உத்தரவு

ஆயுஷ் படிப்புகளில் நூற்றுக்கணக்கான இடங்கள் காலி: சிறப்புக் கலந்தாய்வில் நிரப்ப முடிவு

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

SCROLL FOR NEXT