வட சென்னை 2 : தனுஷ் அறிவிப்பு!
வட சென்னை 2 ஆம் பாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக நடிகர் தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு
வட சென்னை 2 ஆம் பாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் நட்சத்திர விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை தங்களின் கனவுத் திட்டம் என்றும் ஐசரி கணேஷ் கூறினார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்த வட சென்னை படத்தின் முதல் பாகம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், விழாவில் பங்கேற்ற நடிகர் தனுஷ், "படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளோம். இனிமேலாவது, மேடைகளில் வட சென்னை 2 பற்றிய கேள்விகளை கேட்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்.
Ishari K Ganesh calls Dhanush's Vada Chennai 2 a dream project
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.