FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

திருவண்ணாமலையில் நிறைவடையும் தனுஷின் ஓம் படப்பிடிப்பு?

ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது...

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:19 pm IST
திருவண்ணாமலையில் தனுஷ்.
பகிர்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.

நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தைத் தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம், அக்டோபர் 16 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படத்தின் முதல் பாடலான அலாக்கா லோவா பாடலை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் ரோகேஷ் எழுதிய இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில், இடம்பெற்ற தனுஷின் நடனமும் நடிகர் மம்மூட்டியின் தோற்றமும் ரசிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலை கோவில் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. அங்கு, தனுஷைச் சந்திக்கும் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க முயன்று வருகின்றன்ர். இதுகுறித்து விடியோ சமூக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும், நடிகர் தனுஷ் சிவன் பக்தர் என்பதாலும் படத்தின் பெயர் காரணமாகவும் ஓம் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நிறைவடைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Filming for the movie Om, starring actor Dhanush, is currently underway in Tiruvannamalai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments