செய்திகள்

மெய்யழகன் இசை வெளியீட்டு விழா தேதி!

DIN

மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன், முதல் பார்வை போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தில், நடிகர் அரவிந்த் சுவாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மெய்யழகன் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆக.31 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழா கோயமுத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளதாகவும் நடிகர் சூர்யாவும் நிகழ்வில் கலந்துகொள்வதாகவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

SCROLL FOR NEXT