செய்திகள்

கோட் - எந்தக் காட்சியையும் ஊகிக்க முடியாது: வெங்கட் பிரபு

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

DIN

கோட் திரைப்படத்தின் கதை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஆக்சன், டீஏஜிங் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

சமீபத்தில், இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு நேர்காணலில் பேசியபோது, “இந்தப் படத்துக்காக பல நாடுகளில் படப்பிடிப்பை நடத்தினோம். புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். கோட் திரைப்படத்தின் எந்தக் காட்சியையும் திரைக்கதையையும் ரசிகர்களால் ஊகிக்க முடியாது.” எனக் கூறியுள்ளார்.

மேலும், இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராகும் என்கிற நம்பிக்கையில் நடிகர் விஜய் இருப்பதாக, நடிகர் வைபவ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT