நடிகை நிவேதா தாமஸ் உடல் பருமனாக இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக சாகினி டாகினி (தெலுங்கு), எந்தாடா சஜி (மலையாளம்) நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது, ’35 சின்ன கதகாடு’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிவேதா தாமஸ் இன்று கலந்துகொண்டார். உடல் எடை அதிகரித்து, திடீரென அடையாளம் தெரியாத அளவிற்குத் தோற்றமளித்தது அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.