ரஜினி பிறந்த நாளில் என்னென்ன அப்டேட்கள்?
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளில் சில அப்டேட்கள் வெளியாகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது.
கூலி திரைப்படமும் பிரம்மாண்டமாக உருவாகி வருவதால் உறுதியாக ரூ. 500 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இதையும் படிக்க: உடல் எடையைக் குறைத்த அஜித்!
அதேநேரம், இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளில் (டிச. 12) கூலி படத்தின் டீசர் மற்றும் ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு புரமோ ஆகியவை வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.