அன்னம் தொடரில் திவ்யா கணேஷ். 
செய்திகள்

முக்கோண காதல் கதையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

அன்னம் தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.

DIN

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ், புதிய தொடரொன்றில் நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் இன்றுமுதல்(டிச. 2) ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் அன்னம். இத்தொடரில் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனிஃபர் பாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை திவ்யா கணேஷ் நடிக்கிறார்.

மகாநதி தொடரில் நடித்துவந்த நடிகை திவ்யா கணேஷ், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இத்தொடரில் இருந்து விலகினார்.

திவ்யா கணேஷ்.

இவர் முன்னதாக கேளடி கண்மணி, சுமங்கலி, லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை திவ்யா கணேஷ்.

இந்த நிலையில், தற்போது திவ்யா கணேஷ் அன்னம் தொடரில் இணைந்துள்ளார். இது தொடர்பான முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

அயலி இணையத் தொடரில் தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் நடித்து பிரபலமான அபி நட்சத்திரா அன்னம் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். கனா காணும் காலங்கள் -2 தொடர் பிரபலம் பரத் குமார் நாயகனாக நடிக்கிறார்.

மாமன் மகனான கார்த்திக்கை(பரத் குமார்) காதலிக்கும் அத்தை மகளான அன்னம்(அபி நட்சத்திரா), ஆனால் கார்த்திக், ரம்யாவை (திவ்யா கணேசன்) விரும்பும் முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளதாக அன்னம் தொடரின் முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.

மேலும் இத்தொடரில் மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்தொடர் இன்றுமுதல்(டிச. 2) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சுந்தரி தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், இத்தொடருக்கு மாற்றாக அன்னம் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT