செய்திகள்

திரைப்பட விமர்சனங்களைத் தடை செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்

திரை விமர்சனங்கள் கருத்து சுதந்திரம் என உயர்நீதிமன்றம் பதில்...

DIN

திரைப்பட விமர்சனங்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பதிலளித்துள்ளது.

கங்குவா திரைப்படத்திற்குக் கிடைத்த மிக மோசமான விமர்சனங்களால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய படங்கள் வெளியான முதல் மூன்று நாள்களுக்கு விமர்சனங்களைத் தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

இதுகுறித்து விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர், விமர்சனங்கள் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி விமர்சனத்தை முறைப்படுத்த விதிகள் வகுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

மேலும், அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதை மாத்திரை விற்ற இளைஞா் கைது

பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

சைக்கிள் மீது காா் மோதல்: காவலாளி உயிரிழப்பு

பருவமழைக்கு முன் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT