முகப்பு
செய்திகள்

புஷ்பா - 3 அறிவிப்புடன் முடியும் புஷ்பா- 2!

புஷ்பா - 3 குறித்து...

Updated On : 3 டிசம்பர், 2024 at 10:07 AM
பகிர்:

புஷ்பா - 2 திரைப்படத்தின் இறுதியில் புஷ்பா - 3க்கான முன்னிலை காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா உள்ளிட்ட சில பகுதிகளில் டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்து திரையிடப்படுகிறது.

கிட்டத்தட்ட 12,000 திரைகளில் வெளியாகும் படமென்பதால் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இப்படம் டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஷ்பா - 2 நாளை( டிச.4) வெளியாகவுள்ள நிலையில் இப்போதே வசூல் நிலவரங்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக இது இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா - 2 குழு...

தற்போது, புஷ்பா - 2 இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ள நிலையில், இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி முடிந்ததும் இறுதியில் புஷ்பா -3க்கான முன்னிலை காட்சிகளை வைத்துள்ளனராம்.

புஷ்பா ரைஸ், புஷ்பா ரூல் தொடரின் இறுதியாக புஷ்பா - 3 ராம்பேஜ் (rampage) எனப் பெயரிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →