பிக் பாஸ் தமிழ் படம்: Hotstar
செய்திகள்

ஏஞ்சல் vs டெவில்!! தரக்குறைவான செயல்களில் பிக் பாஸ் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்றைய ப்ரோமோ...

DIN

பிக் பாஸ் வீட்டில் சகப் போட்டியாளர்களை கோபமடைய வைப்பதற்காக மிகவும் தரக்குறைவான வார்த்தைகளாலும், இறக்கமற்ற செயல்களிலும் போட்டியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 8 வாரங்களை கடந்துள்ள நிலையில், தற்போது நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, ஏஞ்சல்களாக 8 பேரும், டெவில்களாக 8 பேரும் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் ஏஞ்சல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களை டெவில்கள் கோபமடைய வைத்தால், ஏஞ்சல்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டார் பறிக்கப்படும்.

அவ்வாறு அதிக ஸ்டார்களை பறிக்கும் போட்டியாளருக்கு அடுத்த வாரம் ‘நாமினேஷன் ஃப்ரீ பாஸ்’(வெளியேற்ற தேர்ந்தெடுப்பதில் இருந்து விலக்கு) வழங்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஏஞ்சல்களை கோபமடைய வைப்பதற்காக டெவில்களாக இருந்த போட்டியாளர்கள் சிலர், மிகவும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவது போன்று இன்றைய ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.

அன்ஷிதா, பவித்ரா, ஆனந்தி உள்ளிட்ட போட்டியாளர்களின் முகத்தில் பச்சை முட்டையை தடவுவது, அவர்களை அதிகளவிலான முட்டையை குடிக்கச் சொல்வது, குப்பையை வாயில் வைப்பது போன்ற செயல்களில் மஞ்சரி, சாச்சனா உள்ளிட்டோர் ஈடுபட்டது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஒரு கட்டத்தில், கோபமடைந்த அன்ஷிதா உடனடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து தன்னை வெளியேற்றும்படி கோபத்தில் கத்தும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, ஜாக்குலின், செளந்தர்யா, தர்ஷிகா ஆகியோர் விளையாட்டுக்கு நடுவே தனிப்பட்ட முறையில் எல்லை மீறி மோதிக் கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளன.

மேலும், போட்டியாளர்களுக்கு இடையே டாஸ்க் என்ற பெயரில் ஒருமையில் பல்வேறு முறை பேசிக் கொண்டதும் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT