நடிகர் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் ஓடிடியில் இன்று(டிச.5) வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம், கடந்த தீபாவளியையொட்டி, திரையரங்குகளில் வெளியானது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இதையும் படிக்க | புஷ்பா 2: நெரிசலில் சிக்கிய பெண் பலி; குழந்தைகள் மயக்கம்!
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட அமரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
உலக அளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் ரூ. 42.3 கோடி வசூலித்தது.
தொடர்ந்து ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலக அளவில் ரூ. 300 கோடிக்கு மேல் அமரன் படம் வசூலித்தது.
இந்நிலையில் அமரன் படம் டிசம்பர் 5 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதன்படி, நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் உரிமையை ரூ. 60 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.