பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் முதல்முறையாக கோபமடைந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் மீதும் கோபமடையாத நபராக ரஞ்சித் பார்க்கப்படும் நிலையில், ஜாக்குலின் பேசியதில் கோபமடைந்து போட்டியை விட்டு வெளியேற முனைந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் பாடகர் ஜெஃப்ரி கேப்டனாக உள்ளார். இந்த வாரத்தில் டெவில்களும் ஏஞ்சல்களும் டாஸ்க்கை போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
ஏஞ்சல் அணியில் ரஞ்சித், வி.ஜே. விஷால், அன்ஷிதா, ஆர்.ஜே. ஆனந்தி, பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, ரயான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். டெவில்களாக செளந்தர்யா, ஜாக்குலின், முத்துக்குமரன், ராணவ், சாச்சனா, மஞ்சரி, தர்ஷிகா, தீபக், அருண் பிரசாத் உள்ளிட்டோர் உள்ளனர்.
டெவில்களின் வேலை, ஏஞ்சல்களை பொறுமை இழக்கச் செய்து, அவர்களிடம் இருந்து ஸ்டார்களைப் பெறவேண்டும். ஏஞ்சல்கள், தங்களுக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அமைதி காக்க வேண்டும்.
நேற்று டெவில்களாக இருந்தவர்கள் இன்று ஏஞ்சல்களாகவும், இன்று ஏஞ்சல்களாக இருந்தவர்கள் டெவில்களாகவும் மாறி போட்டியை விளையாட வேண்டும் என பிக் பாஸ் உத்தரவிட்டார்.
கோபமடைந்த ரஞ்சித்
நேற்று ஏஞ்சல் குழுவில் இருந்த ரஞ்சித், ஜெஃப்ரி உள்ளிட்டோர் டெவில்களாக மாறி விளையாடுகின்றனர். இதில் இம்முறை ஏஞ்சலாக உள்ள ஜாக்குலினிடம் உள்ள இதயங்களைப் பறிப்பதற்கு, அவரைக் கோபப்படுத்தும் வகையிலான செயல்களைச் செய்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜாக்குலின் ஏஞ்சல் என்பதை மறந்து டெவில்களிடம் கத்துகிறார். போட்டியை எல்லைக்குட்பட்டு விளையாடத் தெரியவில்லை, அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்த ரஞ்சித் இப்படி நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஜாக்குலின் கத்துகிறார்.
இதற்கு பதிலளித்த ரஞ்சித், ’இது போட்டிமா, அதற்காகத்தான் நான் உன்னைக் கோபப்படுத்துவது போன்று நடந்துகொண்டேன்’ என விளக்கமளிக்கிறார். அப்போது கோபமடைந்த ரஞ்சித், தான் வென்ற இதயங்களை பறித்து வீசிவிட்டு, போட்டியிலிருந்து விலகுகிறார். இது தொடர்பான முன்னோட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.
ஜாக்குலின் போட்டியை புரிந்துகொள்ளாமல் நாடகமாடுவதாகவும், இதனால் ஏஞ்சல்களும் டெவில்களும் போட்டியின் சாராம்சமே சீர்கெடுவதாகவும் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.