ரஞ்சித் / தர்ஷிகா படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் ரஞ்சித்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் நடிகர் ரஞ்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் நடிகர் ரஞ்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களாக ரஞ்சித், மஞ்சரி தேர்வான நிலையில், இவர்களிடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதால், ரஞ்சித் கேப்டனாக தேவாகியுள்ளார்.

கடந்த வாரம் ஜெஃப்ரி கேப்டனாகத் தேர்வானார். இவரின் தலைமையின் கீழ் ஏஞ்சல்களும் டெவில்களும் டாஸ்க் நடைபெற்றது.

இந்த வாரம் ரஞ்சித் கேப்டனாகியுள்ளதால், அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரஞ்சித் கோபப்படாமல் சாந்தமாக பேசும் நபர் என்பதால், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவார் என்பது போன்ற கருத்துகளும் எழுந்துள்ளன.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இரு போட்டியாளர்கள் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அன்றைய இரவு ரஞ்சித்திடம் பேசிய முத்துக்குமரன்,

''இந்த வாரம் நீங்கள் கேப்டனாக வாய்ப்பு அதிகம் உள்ளது. கேப்டனாக நீங்கள் பொறுப்புடனும் சரியான வழியிலும் செயல்பட வேண்டும். நான் கேப்டனாக இருந்தபோது சரி என நினைத்தவை எல்லாம் தவறாக வெளிப்பட்டது. அதுபோன்று நடக்காமல் கவனமாக செயல்படுங்கள்'' என ரஞ்சித்திடம் பேசுகிறார்.

இதனால் ஆண்கள் அணியில் உள்ள பலரும் ரஞ்சித்துக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும், பெண்களிடமிருந்து பிரச்னை எழ வாய்ப்புள்ளதாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: வாக்குகளுக்காக காத்திருக்கும் போட்டியாளர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT