என்னை இழுக்குதடி பாடலின் மேக்கிங் விடியோ 
செய்திகள்

காதலிக்க நேரமில்லை: என்னை இழுக்குதடி பாடலின் மேக்கிங் விடியோ!

கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் என்னை இழுக்குதடி பாடலின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".

ஜெயம் ரவி, நித்யா மெனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுக்காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது, டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி’ பாடல் நவ. 22இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

யூடியூப்பில் மட்டும் இந்தப் பாடல் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இதன் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

"வரிகள் நீக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு பேரழிவு!": Trump எச்சரிக்கை! | Tax | Federal Court of US

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் நாகேந்திரன்

26 ஆண்டுகளுக்குப் பின்..! இளைஞரின் நுரையீரலில் இருந்த பேனா மூடியை அகற்றிய மருத்துவர்கள்!

சீனாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT