நித்யா மெனன். படம்: இன்ஸ்டா / நித்யா மெனன்
செய்திகள்

நான் யார்? மேனன், மெனன்? ரூமி கவிதையால் மீண்டும் பெயர் குறித்து பதிவிட்ட நடிகை!

நடிகை நித்யா தனது பெயர் குறித்து மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

DIN

கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா. அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

தற்போது தனுஷுடன் இட்லி கடை படத்திலும் அறிமுக இயக்குநர் காமினி இயக்கத்தில் 'டியர் எக்ஸஸ்' படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனக்கு பின்னொட்டாக இருக்கும் பெயர் சாதியப் பெயர் கிடையாது. மேனன் அல்ல மெனன் என விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நித்யா மெனன் கூறியதாவது:

நான் யார்? எனது பெயர் மட்டுமே. மற்றவை அனைத்தும் அவரே என்று ரூமி கூறியுள்ளார்.

ஆனால், எனது பெயர் என்ன? அதுவும் விவாதத்துக்குரியதாக உள்ளது. மெனன் என நான் சொல்கிறேன். அனைவரும் மேனன் என்று சொல்கிறார்கள். அடையாளம், வீடு, பெயர் என அனைத்தும் மற்றவர்கள் அறிந்துகொள்ளதானே.

நான் மீண்டும் ‘நான் யார் ?” என்ற இடத்துக்கே வருகிறேன். மன அமைதி. மற்ற அனைத்தும் தொடர்பற்றதாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

26 ஆண்டுகளுக்குப் பின்..! இளைஞரின் நுரையீரலில் இருந்த பேனா மூடியை அகற்றிய மருத்துவர்கள்!

சீனாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

“Trumpன் வரிகள் சட்ட விரோதமானது!!”: அமெரிக்க நீதிமன்றம்! | செய்திகள்: சில வரிகளில் | 30.08.25

மயக்குறியே... ரெஜினா கேசண்ட்ரா!

உதய்பூரில் நிகழ்ந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ காயம்!

SCROLL FOR NEXT