தீபக்கிற்கு ஆறுதல் கூறும் அருண் பிரசாத் படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் முதல்முறையாக அழுத தீபக்!

அருண் பிரசாத் முன்பு தீபக் அழுத விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் தீபக், தனது தவறை உணர்ந்து முதல்முறையாக கண்ணீர் விட்டு அழுதார்.

அருண் பிரசாத் முன்பு தீபக் அழுத விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 10 வாரத்தை எட்டியுள்ளது. இதில் 65வது நாள் போட்டியின்போது காலையிலேயே அருண் பிரசாத்துக்கும் சமையல் செய்யும் அணியில் இருப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொழிலாளர் அணியில் இருக்கும் அருண் பிரசாத் காலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து தேநீர் கேட்கிறார். அப்போது கேலியாக பேசிய தீபக், வேலையாள்களுக்கு இவ்வளவுதான் தேநீர் கொடுப்போம் எனக் கூறுகிறார்.

ஆனால், இதனால் ஆத்திரமடைந்த அருண் பிரசாத், தொழிலாளி என என்னை மட்டம்தட்ட வேண்டாம், நானும் பிக் பாஸ் வீட்டில்தான் உள்ளேன். இந்த வீடு எனக்கும் சொந்தமானதுதான். பிக் பாஸ் வீட்டில் எனக்கும் உரிமை உள்ளது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இதற்கு பதிலளித்து பேசிய தீபக், பணியின் அடிப்படையில் மட்டுமேதான், தான் அப்படி கூறியதாகவும், அவரை மட்டம் தட்டுவதற்காக கூறவில்லை எனவும் விளக்கமளிக்கிறார். தீபக்கிற்கு ஆதரவாக பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பேசுகின்றனர்.

தொழிலாளிக்கு இவ்வளவுதான் தேநீர் கொடுப்போம் என தீபக் கூறுவதை ஏன் இந்த வீட்டில் உள்ளவர்கள் தவறு என உணரவில்லை எனக் கூறி வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.

பின்னர் தான் கேலியாகக் கூறியதை சீரியஸாக எடுத்துக்கொண்டு கோபமடைந்த அருண் பிரசாத்திடம் தீபக் மன்னிப்பு கோருகிறார். நீ என் சகோதரன் போன்றவன் என்ற உரிமையில்தான் தான் அப்படி கூறியதாகவும், வேறு யாரேனும் இருந்திருந்தால் அவ்வாறு பேசியிருக்க மாட்டேன் எனவும் கூறுகிறார். நீ இவ்வளவு பாதிக்கப்படுவாய் என நான் நினைக்கவில்லை என வருந்துகிறார்.

அப்போது ஒருகட்டத்துக்கு மேல், தீபக் கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கேட்கிறார். அதுவரை தீபக் மீது கடும் கோபத்தில் இருந்த அருண் பிரசாத், அழும்போது அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறுகிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அருண் பிரசாத் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு வார்த்தைகளை விடுவதாகவும், அவர் தன்னை உணர வேண்டும் எனவும் தீபக்கிற்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் விளையாட்டைக் கெடுப்பவர் முத்துக்குமரன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT