வடிவேலுவை அவதூறாக பேச மாட்டேன்: சிங்கமுத்து
வடிவேலு, சிங்கமுத்து வழக்கு குறித்து....
நடிகர் வடிவேலுவை இனி அவதூறாகப் பேச மாட்டேன் என நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல்களுக்கு நடிகா் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னைப்பற்றி பொய்யான தகவல்களைக் கூறி தரக்குறைவாக பேசியுள்ளதாக குற்றம் சாட்டிய நடிகா் வடிவேலு சென்னை உயா்நீதிமன்றத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடா்ந்திருந்தாா்.
அதில், ‘பொதுமக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ரூ. 5 கோடியை மான நஷ்டஈடாக வழங்க நடிகா் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் கோரியிருந்தாா்.
இதையும் படிக்க: 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த கோல்டன் ஸ்பேரோ!
இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சிங்கமுத்து தரப்பில் செய்யப்பட்ட மனு தாக்கலில், “இனி வடிவேலு குறித்து பொதுவெளியிலோ, பேட்டிகளிலோ அவதூறாக பேசமாட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.