பிரபாஸ் படத்தில் நடனமாடும் நயன்தாரா!
பிரபாஸ் படத்தில் நயன்தாரா...
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் தி ராஜா சாப் படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.
சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. சமீபத்தில் வெளியான கல்கி ஏடி 2989 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.
Advertisement
இதையும் படிக்க: தாமதமாகும் இளையராஜா பயோபிக்! என்ன காரணம்?
தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு நடிகை நயன்தாரா சிறப்பு நடனமாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜா சாப் அடுத்தாண்டு ஏப்.10 ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.