திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
தனுஷின் கர டிரைலர்....
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் வருகிற ஏப். 30 ஆம் தேதி வெளியாகிறது. போர் தொழில் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.
நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ், ஜெயராம், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். வங்கிகளைக் கொள்ளையடிக்கும் நாயகனாக தனுஷ் நடித்துள்ளது காட்சிகளில் தெரிகிறது. 1991 ஆம் ஆண்டு வளைகுடா நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதலால் ராமநாதபுரத்திலிருந்த கிராமம் எப்படி பாதிப்புக்கு உள்ளானது என்கிற கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
ஓட்டைப் பிரிச்சு உள்ள இறங்கறதைத் தவிர வேற ஒன்னும் எனக்குத் தெரியாது என்கிற தனுஷின் வசனம் அவர் திருடனாக இருந்தவர் என்பதைச் சொல்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The trailer for the film Kara, starring actor Dhanush, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.