FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரஜினி, சூர்யாவுக்காக... ஓம் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு குறித்து...

23 செப்டம்பர் 2026, 7:56 pm IST
ஓம் படத்தில் தனுஷ் - படம்: யூடியூப் / திவோ மியூசிக்
பகிர்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தைத் தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம், அக்டோபர் 16 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படத்தின் முதல் பாடலான அலாக்கா லோவா பாடலை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் ரோகேஷ் எழுதிய இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படம் அக். 16 ஆம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது நடிகர் தனுஷ் இந்தப் படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்த மாதிரியான நேரத்தில், படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவது சவாலானது. நமது படத்துக்கு ஒருநாள் முன்பாக நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் அக்.15ஆம் தேதி வெளியாகிறது. மரியாதை நிமித்தமாக நமது படத்தை வேறு தேதிக்கு மாற்றுகிறோம்.

அதே சமயத்தில், நாம் தீபாவளிக்கும் வரவில்லை. ஏனெனில் அப்போது சூர்யா சாரின் படமும் வெளியாகிறது. உண்மையில் அவர்கள்தான் முதலில் அந்த வெளியீட்டுத் தேதியை அறிவித்தார்கள். பெரிய படங்கள் தங்களுக்கு உள்ளாகவே பொதுவான புரிதல் இருக்க வேண்டுமென நம்புகிறேன். மேலும், திரைத்துறையின் நலனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

விரைவில் ஓம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவிப்போம் எனக் கூறியுள்ளார். வரும் அக். 15 ஆம் தேதி ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைக்கு வருகிறது. நடிகர் சூர்யாவின் சீன் படம் தீபாவளியை முன்னிட்டு நவ. 6 ஆம் தேதி வெளியாவதும் குறிப்பிடத்தக்கது.

summary

Dhanush's film 'Om' postponed for the sake of Rajini and Suriya!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments