ராணவ் 
செய்திகள்

வலியில் துடித்த ராணவ்! பிக் பாஸுக்கு பெற்றோர் கோரிக்கை!

ராணவ் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நீடிப்பாரா? அல்லது வெளியேற்றப்படுவாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ராணவ்வுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மூன்று வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் ராணவ் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நீடிப்பாரா? அல்லது வெளியேற்றப்படுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனிடையே ராணவ்வை பிக் பாஸ் வீட்டிலிருந்து அனுப்பிவைக்குமாறு அவரின் பெற்றோர் விஜய் தொலைக்காட்சிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கோரிக்கை வைத்ததாகத் தகவல் பரவிவருகிறது.

ராணவ் பெற்றோர் கோரிக்கை

இதற்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் கழுத்து வலியில் ராணவ் துடித்துக்கொண்டிருந்தார். அப்போது ராணவ்வின் பெற்றோர் பிக் பாஸ் நிகழ்ச்சி இயக்குநரிடம் பேசியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தங்கள் மகன் சிரமப்படுவதைப் பார்க்கமுடியவில்லை என்றும், இதனால் தங்கள் மகனை வீட்டிற்கு அனுப்புமாறும் கோரிக்கைவைத்துள்ளனர்.

எனினும் பெற்றோருக்கு விளக்கமளித்துள்ள பிக் பாஸ், தங்கள் மகன் தனது இலக்கை அடையும் பயணத்தின் ஒரு பகுதியாக இங்கு வந்துள்ளதாகவும், அனைத்துயும் கடந்து அவர் விளையாடிவருவதாகவும் ஆறுதல் கூறியுள்ளனர்.

அடிபட்டு வலியில் துடித்த ராணவ்

வலியில் துடித்த ராணவ்

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 72வது நாளான இன்று (டிச. 17) பிக் பாஸ் டாஸ்க்கின்போது ஜெஃப்ரி அழுத்தியதில், ராணவ்வுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இதனை கவனிக்காத சக போட்டியாளர்கள், ராணவ் வலிப்பது போன்று நடிப்பதாகக் கூறினர். பவித்ரா ஜனனி, செளந்தர்யா, ஜெஃப்ரி ஆகியோர் ராணவ் நடிப்பதாகக் கூறிவந்த நிலையில், ஓடிவந்த அருண் பிரசாத் ராணவ்வை மருத்துவ உதவி அறைக்கு அழைத்துச் செல்கிறார்.

முதலுதவிக்கு அழைத்துச்செல்லப்படும் ராணவ்

அங்கிருந்து சிறிது நேரத்தில், ராணவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிக் பாஸ் அறிவிக்கிறார். இதனால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிகிச்சைக்குப் பிறகு கையில் கட்டுடன் ராணவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான முன்னோட்டக் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ராணவ் குறித்து அவரின் பெற்றோர்கள் கூறியவை இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பால் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT