விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா!
விடாமுயற்சி குறித்து...
விடாமுயற்சி திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சிக்கந்தர் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்?
இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், ஒரு பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் த்ரிஷா கலந்துகொண்டு நடித்து வருகின்றனராம்.
சமீபத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பை முடித்த அஜித், உடனடியாக விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைந்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.