செய்திகள்

சூரி படத்தில் ஸ்வாசிகா!

மாமன் படத்தின் அப்டேட்...

DIN

நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஸ்வாசிகா இணைந்துள்ளார்.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

உறவுகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.

லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமடைந்த ஸ்வாசிகா தமிழில் சூர்யா - 45 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானிய வங்கிக்கு ஆர்பிஐ ஒப்புதல்!

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: பறை இசைத்து தொடங்கி வைத்த முதல்வர் மு. க. ஸ்டாலின்!

கென் கருணாஸின் புதிய திரைப்படத்துக்கு விஜய் படத்தலைப்பு - போஸ்டர் வெளியீடு!

வேதாந்தா பங்குகள் அதிரடியாக உயர்வு!

இந்தியாவுக்கு வருகை தரும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்!

SCROLL FOR NEXT