முகப்பு
செய்திகள்

பிரபல கவிதையை இயக்கும் கிறிஸ்டோஃபர் நோலன்!

கிறிஸ்டோஃபர் நோலனின் புதிய படம் குறித்து...

Updated On : 25 டிசம்பர் 2024, 6:27 pm IST
கிறிஸ்டோஃபர் நோலன்
பகிர்:

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் பிரபல கவிதையைத் திரைப்படமாக இயக்க உள்ளார்.

உலகளவில் அறிவார்ந்த இயக்குநர் எனப் பெயரெடுத்தவர் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன். இதுவரை, இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றியை மட்டுமே பெற்றிருக்கின்றன. மொமண்டோ, பேட்மேன், இண்டர்ஸ்டெல்லர் என நீளும் பட்டியலில் இறுதியாக ஓப்பன்ஹெய்மரும் ஆஸ்கர் விருதுகளைத் தட்டியது.

பல விமர்சகர்களாலும் திரைத்துறைக்கு வந்த விஞ்ஞானி என்றே நோலன் பாராட்டப்படுகிறார். சமீபத்தில், இங்கிலாந்து அரசு நோலனுக்கு சர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

Advertisement

Advertisement

இதற்கிடையே, கிறிஸ்டோஃபர் நோலன் அடுத்து என்ன படத்தை இயக்கவுள்ளார் என்கிற ஆவலும் ரசிகர்களிடம் இருந்தது. இந்த நிலையில், யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிரபல கிரேக்க கவிஞரான ஹோமர் எழுதிய ‘த ஒடிசி (the odyssey)' கவிதையை நோலன் இயக்கவுள்ளாராம். படத்திற்கும் அதே பெயரையே வைத்துள்ளனர். உலகம் முழுவதும் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் புத்தம் புதிய ஐமேக்ஸ் தரத்தில் உருவாகும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், இப்படம் ஜூலை 17, 2026 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். நாயகனாக மேட் டாமன் (mat damon) நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

த ஒடிசி (the odyssey) என்ன கவிதை?

கிரேக்கத்தின் இதாகா (ithaka) பகுதியைச் சேர்ந்த போர் வீரர்கள் ட்ராய் (troy) பகுதியில் அமைந்திருக்கும் கோட்டைக்குள் பெரிய குதிரையைப் பயன்படுத்தி போர் தொடுக்கின்றனர். இதில், இதாகாவைச் சேர்ந்த நாயகனான ஒடிசியஸ் போர் முடிந்ததும் கோட்டையிலிருந்து எப்படி இதாகாவுக்குத் தப்பிச் செல்கிறார் என்கிற பயணமே கவிதையின் கதை.

லாஜிக் இல்லாத சாகசமும் புராணமுமாக எழுதப்பட்ட இக்கவிதையை நோலன் எப்படி இயக்கவுள்ளார் என்பதில் ரசிகர்களுக்குப் பெரிய ஆர்வம் எழுந்துள்ளது.

விஞ்ஞான பார்வையிலிருந்து விலகி கடவுள், தரிசனம் என செல்வாரா இல்லை இதில் நோலன் தனித்துவம் ஏதாவது இருக்குமா என இப்போதே விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.