முத்துக்குமரன் / செளந்தர்யா படம் | எக்ஸ்
செய்திகள்

செளந்தர்யாவுக்கு வாக்களிக்க வேண்டாம்: முத்துக்குமரன்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யாவுக்கு மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யாவுக்கு மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று வி.ஜே. விஷாலுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜாக்குலினும், ராணவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தீபக்கும், அன்ஷிதாவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12 வாரங்களை நிறைவு செய்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் 84வது நாளான இன்று போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடவுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, பிக் பாஸ் வீட்டில் எனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் இவருக்கு வாக்களிக்க வேண்டாம் என யாரைக் குறிப்பிடுவீர்கள் என்ற கேள்வியை விஜய் சேதுபதி எழுப்புகிறார்.

உழைப்பு குறைவு

இதற்கு போட்டியாளர்கள் பதிலளிக்கின்றனர். குறிப்பாக மக்கள் மனங்களை பெரிதும் கவரந்தவராக உள்ள செளந்தர்யாவுக்கு மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என முத்துக்குமரன் கூறுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் நீடிக்க வேண்டும் என சக போட்டியாளர்கள் செலுத்திய உழைப்பை விட செளந்தர்யாவின் உழைப்பு குறைவு என்பதால் அவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று வி.ஜே. விஷால் தனது உண்மை குணத்தை வெளிப்படுத்தாமல், மற்றவர்களை முன்னிறுத்தி பின்னாடி இருந்து தனது ஆட்டத்தை விளையாடுவதால், அவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று நடிகர் ராணவுக்கு வாக்களிக்க வேண்டாம் என அன்ஷிதாவும், தீபக்கும் கூறுகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளில் இருந்தே, அவர் இங்கு வந்தது ஏன் என்ற கேள்வியை நான் எழுப்பி வருகிறேன் என அன்ஷிதா குறிப்பிட்டார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் வழக்கும் போட்டிகளையும் முழுமையாக உள்வாங்காமல், நாம் பேசுவதையும் உள்வாங்காமல் தனக்கு தோன்றியதை, மற்றவர்கள் குறித்த கவனமின்றி பேசுவதால் ராணவ் பல இடங்களில் விமர்சனத்திற்குள்ளாவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், தீபக்கும், அன்ஷிதாவும் ராணவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பேசியுள்ளனர். இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த விமானப் படை வீரர்!

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

இருளும் அழகே அவள் பார்வையில்... அனு!

ஆஸி. உடனான தோல்வியிலிருந்து இந்தியா வெளியே வரவேண்டும்: மிதாலி ராஜ்

ஹரியாணாவில் மற்றொரு காவல் துறை அதிகாரி தற்கொலை

SCROLL FOR NEXT