செய்திகள்

மமிதாவை அடிக்கவில்லை, கை மட்டுமே ஓங்கினேன்: பாலா

நடிகை மமிதா பைஜூவை அடிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார் பாலா...

DIN

இயக்குநர் பாலா நடிகை மமிதா பைஜூவை அடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

சூப்பர் சரண்யாவில் அசத்திய மமிதா பைஜூ பிரேமலு படத்தின் மூலம் பெரிதாகப் பிரபலமடைந்தார். அப்படத்தின் வெற்றியால் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது, நடிகர் விஜய்யின் 69-வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் பிரேமலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நேர்காணல் ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, “வணங்கான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, இயக்குநர் பாலா, ‘வில்லடிச்சா மாடன்’ என்கிற பாடலுக்காக வாத்தியம் ஒன்றை வாசித்தபடி ஆடச் சொன்னார். ஆனால், நான் அதற்கு தயாராக இருக்கவில்லை. அதனால், சில டேக்குகள் எடுத்தேன். இதனால், ஆத்திரமடைந்த பாலா என் முதுகில் அடித்தார். அதன்பின், அப்படத்திலிருந்து நான் விலகிக்கொண்டேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அடுத்த சில நாள்களில், “பாலா என்னை அடிக்கவில்லை, என்னை நேர்காணல் எடுத்தவர்கள் தவறாக சித்திரித்திருக்கிறார்கள். வணங்கான் படப்பிடிப்பில் மன ரீதியாக, உடல் ரீதியாக எந்த தொந்தரவும் ஏற்படவில்லை” என மமிதா விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில், வணங்கான் படத்தின் புரமோஷன் நேர்காணலில் பேசிய இயக்குநர் பாலா, “ மேக்கப் இல்லாமல் காட்சி எடுக்க திட்டமிட்டிருந்தபோது முழு மேக்கப்புடன் மமிதா பைஜூ படப்பிடிப்பிற்கு வந்தார். அப்போது, அடிப்பதுபோல் கையை மட்டுமே ஓங்கினேன். அவரை அடிக்கவில்லை. பின், மேக்கப் கலைஞர் மும்பையைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து தெரியாமல் இது நிகழ்ந்துவிட்டது என தெரிந்தபோது இருவரும் சகஜமாகிவிட்டோம்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT