செய்திகள்

காஞ்சனா - 4 படத்தில் பேயாக நடிக்கும் பூஜா ஹெக்டே?

காஞ்சனா திரைப்படத்தின் 4ஆம் பாகம் குறித்து...

DIN

காஞ்சனா - 4 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.

குறிப்பாக, நடிகர் சரத்குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து, காஞ்சனா - 2 படத்தை எடுத்தார். அதுவும் வணிக வெற்றியை அடைந்தது.

பின், 2019-ல் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வெற்றிப்படமானது.

சமீபத்தில், ராகவேந்திரா புரடக்‌ஷன் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா - 4 உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாகவும் இதில் பேய் கதாபாத்திரத்தில் பூஜா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT