செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியா? நடிகர் விஜய் பதில்

DIN


நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என விஜய் கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவர் ஏற்கனவே அரசியலில் நுழைவதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வந்த நிலையில், இன்று அரசியல் கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்.

தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயார்! ஜூன் மாதம் திறப்பு விழா!!

மறுவெளியீடாகும் படையப்பா!

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 49 தொகுதிகள் யார் பக்கம்?

தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: ஏக்நாத் ஷிண்டே

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்!

SCROLL FOR NEXT